மகாமங்கள பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :1000 days ago
பண்ருட்டி : கொக்குப்பாளையம் கிராமத்தில் உள்ள மகாமங்கள பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையத்தில் மகா மங்கள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசையை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகம் நேற்று முன்தினம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூலவர் பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள், உற்சவர் பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி நிகும்பலா சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.