உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : மார்ச் 27ல் கோலாகலம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : மார்ச் 27ல் கோலாகலம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்கு மார்ச் 27 ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில்  மூலவர்  அஷ்டாங்க விமானத்திற்கு தங்க  தகடு பதிக்கும் திருப்பணி மற்றும் கோயில் ராஜகோபுரம், சன்னதிகள், திருமதில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு பழமை மாறாத திருப்பணியும் தனித் தனியாக நடந்தது வருகிறது. தங்க விமானத் திருப்பணியில் தாமிரத் தகடு பணி முடிந்து தங்கத் தகடு பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஆனி மாதத்தில் இதற்கான சொர்ண கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கோயிலுக்கான ராஜகோபுரம்,சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு திருப்பணி முடிந்துள்ளதால் மார்ச் 27 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. எட்டு கால பூஜைகளுடன்  யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. அதற்கான யாகசாலை கோயில் வளாகத்தில் மகாமக கிணறு அருகில் அமைக்கப்படுகிறது. யாகசாலைக்கான முகூர்த்தக் கால் நாட்டும்  நிகழ்ச்சி இன்று காலை 9:30 மணி அளவில் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் மார்ச் 23 ல் துவங்கி மார்ச் 27 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !