உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேமத்தான்பட்டியில் கும்பாபிஷேக விழா

நேமத்தான்பட்டியில் கும்பாபிஷேக விழா

காரைக்குடி அருகேயுள்ள நேமத்தான்பட்டி கற்பக விநாயகர், பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேமத்தான்பட்டி கற்பக விநாயகர், பால தண்டாயுதபாணி கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜன.25 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜைகள் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, நான்காம் பூஜை, விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது. யாத்ராதானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.20 க்கு ராஜகோபுரத்தில் விமான மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7.30 மணிக்கு கற்பக விநாயகர், பாலதண்டாயுதபாணி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேமத்தான்பட்டி நகரத்தார்கள் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !