உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவில் திருவிழா: இளநீர், தென்னம்பூ ஊர்வலம்

பகவதி அம்மன் கோவில் திருவிழா: இளநீர், தென்னம்பூ ஊர்வலம்

கூடலூர்: கூடலூர், மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இளநீர், தென்னம்பூ ஊர்வலம் சிறப்பாக நடந்தது.

கூடலூர், பழமையான மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழா 17ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பகல் 12:00 மணிக்கு தேன்வயல் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் இருந்து, வாழைக்குலைகள் வெட்டி, அதனை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலில் வைத்தனர். 14வது நாளான இன்று கணபதி ஹோமத்துடன் பூஜைகளுடன், விழா துவங்கியது. காலை 10.00 மணிக்கு அருள் வாக்கு நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மொத்தவயல் குஞ்சன்செட்டி வீட்டிலிருந்து இளநீர், தென்னம்பூ, வெற்றிலை, பாக்கு அறுவடை செய்து, அதனை வேஷ்டியில் கட்டி, அலகரித்து பூஜை செய்தனர். பிற்பகல் 3:00 மணிக்கு, துவங்கிய இளநீர் ஊர்வலம், கோயிலை வந்தடைந்தது. மாலை 4:00 மணிக்கு பூஜை சிறப்பு பூஜைககள், 6.30 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. இன்று, காலை முதல் சிறப்பு பூஜைகளும் 11:00 மணிக்கு அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. நாளை கணபதி ஹோமம், தொடர்ந்து உஷ பூஜை, கலச அபிஷேகம் மற்றும் மதிய பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜைகளையும் 6:00 மணிக்கு மகா குருதி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு சிறப்பு பூஜைடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !