உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேக பெருவிழா

நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேக பெருவிழா

திருப்பூர்; திருப்பூர், நல்லுார் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முதல் கால யாக பூஜை துவங்கியது.

நல்லுாரிலுள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவும், நல்லுார் மகாமாரியம்மன், மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், பேச்சியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி; நேற்று முதல் கால யாக சாலை பூஜைகளும் துவங்கி நடந்தது. நான்கு கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, நாளை காலை, 5:30 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கோபுரம் மற்றும் கருவறை விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை, 5:45 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு மகாமாரியம்மன், மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, நாளை காலை, 6:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !