உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் முருகன் கோவில்களில் தை கிருத்திகை பூஜை

சூலூர் முருகன் கோவில்களில் தை கிருத்திகை பூஜை

சூலூர்: தை மாத கிருத்திகையை ஒட்டி, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சூலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், தை மாத கிருத்திகையை ஒட்டி நேற்று அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவிலில், பால், தயிர் பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சென்னியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !