வள்ளலார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அழைப்பு
ADDED :980 days ago
அன்னூர்: வள்ளலார் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை சோதி மைய அறக்கட்டளை மற்றும் நல்ல கவுண்டன் பாளையம், பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமம் சார்பில், வரும் 5ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆசிரமத்தில் கருத்தரங்கம் நடக்கிறது, ஆசிரம தலைவர் குருஜி சிவாத்மா தலைமை வகிக்கிறார். அறக்கட்டளை பொதுச் செயலாளர் பால் கண்ணன் கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். தன்னை அறிதல், ஜீவகாருண்யம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறி உள்ளிட்ட தலைப்புகளில், பேச்சாளர்கள் பேசுகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம், என நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.