உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா : 247 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா : 247 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

அரூர்: தேவாதியம்மன் கோவில்  திருவிழாவையொட்டி,   அரூரில், 247 ஆட்டு கிடாய்களை பலியிட்டு, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தர்மபுரி மாவட்டம் அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் சார்பில், தேவாதியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும், தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அச்சமூக மக்களின் வியாபாரம்  மேம்பாடு அடையவும், குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை உள்ளிட்டவைகளை வேண்டி நடத்தப்படும், இந்த தேவாதியம்மன் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபம் பின்புறம் தேவாதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள,  ஆவாரம்  செடியின் அடியில், நேற்று முன்தினம் இரவு, நேர்த்திக்கடனாக, 22 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டன.  தொடர்ந்து நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு,  225 ஆட்டு கிடாய்கள் அம்மனுக்கு பலியிடப்பட்டன. பின், அதன் இறைச்சிகளை அச்சமூகத்தை சேர்ந்த, 2,275 குடும்பத்தினருக்கு பங்கிட்டு  வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !