24ல் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், பிரம்மோற்சவம் வரும் 24ம் தேதி, துவங்க உள்ளது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சியம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம், வரும் 25ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக கடந்த மாதம் 26ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும் 24ம் தேதி, காலை சண்டிஹோமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்கவுள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினசரி காலை, மாலையில், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 8ம் தேதி காலை விஸ்பரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவ உற்சவங்கள் விபரம்:
உற்சவ நாள் பகல் உற்சவம் இரவு உற்சவம்
பிப்.24 சண்டிஹோமம் வெள்ளி மூஷிகம்
பிப்.25 வெள்ளி விருஷபம் தங்கமான்
பிப்.26 மகரம் சந்திர பிரபை
பிப்.27 தங்க ஸிம்ஹம் யானை
பிப்.28 தங்க சூர்ய பிரபை தங்க ஹம்சம்
மார்ச் 1 தங்க பல்லக்கு நாகம்
மார்ச் 2 முத்து சப்பரம் தங்க கிளி
மார்ச் 3 ரதம் - -
மார்ச் 4 பத்ர பீடம் குதிரை
மார்ச் 5 ஆள் மேல் பல்லக்கு வெள்ளி ரதம்
மார்ச் 6 சரபம் கல்பகோத்யானம்
மார்ச் 7 தங்க காமகோடி விமானம் - -
மார்ச் 8 விஸ்வ ரூப தரிசனம் விடையாற்றி உற்சவம்