உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

பகவதியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

வால்பாறை, வால்பாறையிலுள்ள, கொடுங்கலுார் பகவதியம்மன் கோவிலில் நேற்று மஹா கும்பாபிேஷகம் நடந்தது.

வால்பாறை, காமராஜ் நகரிலுள்ள, கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவில் திருப்பணி கடந்த ஆறு மாதங்களாக நடந்தது. திருப்பணி நிறைவடைந்த நிலையில், மஹா கும்பாபிேஷக விழா துவங்கியது. விழாவையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரபூஜை, சங்கல்பம், லேதிகார்ச்சனை, யாக வேள்வி, நாமசந்தனம், ஸ்பர்ஸஹந்தி மூல மந்திரயாகம், ஜெயாதி ஹோமம், மஹாபூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. தீர்த்த கலசத்துடன் பக்தர்கள் கோவிலை வலம் வந்த பின், காலை, 5:30 மணிக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !