உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்.

பழநியில் மலை கோயிலுக்கு காலை முதல் வின்ச், ரோப் கார் சென்டரில் பக்தர் கூட்டம் அலைமோதியது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அடிவாரம், கிரி வீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். கிரிவிதியின் நடுவில் தட்டு கடைகளை வைத்து பக்தர்களுக்கு தொல்லை தருகின்றனர். அலகு குத்தி, காவடி எடுத்து வரும் பக்தர்கள் சன்னதி வீதி, கிரி வீதியை கடந்து செல்வதில் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !