உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா துவக்கம்

தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா துவக்கம்

மயிலாடுதுறை: சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி என்கின்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது, இதனை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாரதனை கட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூரை மகா சிவராத்திரியை முன்னிட்டு 18ம் தேதி இரவு நடைபெற உள்ளது.  அன்று காலையில் திருத்தேர்பவனி ,அலகு காவடிகள் ஊர்வலமும்  மாலை பெண்கள் மாவிளக்கு போடுதல் அதனை தொடர்ந்து பேச்சி ருபம் எனும் ஆகம வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !