பெங்களூரு சிவாங்க பாதையாத்திரை குழுவின் ஈஷா யோக மையஆதியோகி சிற்ப தேர் பாதயாத்திரை
அவிநாசி: பெங்களூரில் செயல்பட்டு வரும் சிவாங்கா ஆன்மீக குழுவினர்,ஆதியோகி சிற்ப தேருடன், கோவையில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு பாதயாத்திரை.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் செயல்பட்டு வரும் சிவாங்கா ஆன்மிக குழுவின் சார்பில் 8ம் ஆண்டாக தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவையில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். முன்னதாக, ஆதியோகி சிற்ப தேருடன் ஆந்திரா, தெலுங்கானா ,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 60ம் மேற்பட்ட பக்தர்கள்,திருமுருகன்பூண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதனை அடுத்து சத்குரு சன்னதியில், பாதயாத்திரை பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி பெங்களூரில், ஆதியோகி சிற்ப தேருடன் புறப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள், ஈஷா யோகா மையத்தை மகா சிவராத்திரியன்று சென்றடைகிறார்கள்.