பஞ்சுபேட்டையில் பொன்னியம்மன் வீதியுலா
ADDED :968 days ago
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டையில், எல்லையம்மன் சமேத ஆதி அண்ணாமலையார் பீடம் உள்ளது. இங்கு மஹா அவதார, 12 சக்திகளான பச்சையம்மன், மீனாட்சி, திரவுபதியம்மன், எல்லையம்மன், அங்காளம்மன், துர்கை, சந்தவெளியம்மன், ஆதிபராசக்தி, படவேட்டம்மன், அன்னபூரணி, பொன்னியம்மன், காளியம்மன் என, முறையே மாதந்தோறும் தமிழ் மாத பிறப்பு அன்று, அந்தந்த மாதத்திற்குரிய அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. அதன்படி, 179வது மாதமாக, மாசி மாத பிறப்பான நேற்று முன்தினம் பொன்னியம்மன் வீதியுலா நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பொன்னியம்மனுக்கு மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, ஏகாம்பரபுரம் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் தெற்கு தெரு, நான்கு ராஜ வீதி, சாலை தெரு, பஞ்சுபேட்டை சின்ன தெரு வழியாக அம்மன் வீதியுலா வந்தார்.