காளஹஸ்தி கோயில் அன்னதானத் திட்டத்திற்கு 10 டன் காய்கறி காணிக்கை
ADDED :1299 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கே ஆர் மார்க்கெட் சார்பில் நேற்று புதன்கிழமை 10 டன் காய்கறிகளை கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக கோயில் அறங்காவலர் குழு தலைவர் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலுவிடம் வழங்கினர். முன்னதாக காய்கறிகளை வழங்க வந்திருந்தவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர். மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.