உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி; சனி பிரதோஷ பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி; சனி பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, மஹா சிவராத்திரி மற்றும் மாசி மாத தேய்பிறை சனி பிரதோஷ பூஜையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, மஹா சிவராத்திரி மற்றும் மாசி மாத தேய்பிறை சனி பிரதோஷ பூஜை நடந்தது.  இதையொட்டி, கோவில் கொடிமரம் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டலம் அருகிலுள்ள பெரிய  நந்தி ஆகியவற்றிற்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு  திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து  நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் எழுப்பிவாறும், ‘ஓம் நமச்சிவாயா’ என, மந்திரங்களை கூறியும், நந்தியம்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !