தேனூரில் 15 ஆண்டுக்கு பின் நடந்த சிவராத்திரி திருவிழா
ADDED :963 days ago
சோழவந்தான்: சமயநல்லூர் அருகே தேனூரில் உள்ள அண்ணன்மார், பொன்னர் சங்கர், வீரமலை கோயில்களில் சிவராத்திரி திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு நடந்தது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வரும் சிவராத்திரி தினத்தில் நடக்கும். கடந்த 15 ஆண்டாக நடந்த பல்வேறு பிரச்னைகளால் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நடந்த திருவிழாவில் பூசாரி பூசைமணி அண்ணன்மார் சாமி பெட்டி சுமந்து நான்கு வீதிகளிலும் வலம்வந்து பொன்னர் சங்கர், வீரமலை கோயிலுக்கு வந்து சேர்ந்தார். இதனால் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தரிசித்து, அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.