ராமேஸ்வரம் அருகே சாதுக்கள் சிவராத்திரி பூஜை
ADDED :1071 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா மடத்தில் சாதுக்கள் சிவராத்திரி பூஜை அபிஷேகம் செய்து கொண்டாடினர். மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி
நேற்று முன்தினம் இரவு தங்கச்சிமடம் தண்ணீர்ஊற்று கிராமத்தில் உள்ள ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா மடத்தில் வடமாநில சாதுக்கள் தமிழகம், கேரளா சேர்ந்த பக்தர்கள் பலர் வருகை தந்தனர். இங்கு சிவன் லிங்கத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து இரவு முழுவதும் பக்தி பரவாசத்துடன் விழா கொண்டாடினார்கள். இவ்விழாவில் மடத்தின் நிர்வாகி ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா சிவராத்திரி விழா குறித்து விளக்கி பேசினார். விழாவில் தமிழ்நாடு வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் சரவணன், ஹிந்து அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.