சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
ADDED :1035 days ago
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், கடந்த, 10ம் தேதி சிவராத்திரி விழாவை ஒட்டி கிராம தேவதை, கணபதி ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதல் நாளில் இருந்து மூஷிக, பல்லக்கு, சந்திரபிரபை, காமதேனு, பூத, அதிகாரநந்தி, கஜ, அஸ்வ, ரிஷிப, கல்பக, ராவணாசூர வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 19ம் தேதி வால்மிகீஸ்வரர், மரகதாம்பிகை இருவருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் சிவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது.