திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஜெயந்தி விழா
ADDED :960 days ago
திருப்போரூர்: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா, ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, சித்திரையில் வசந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர, மாதந்தோறும், கிருத்திகை பரணி உற்சவம், சஷ்டி விழா நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, கந்தசுவாமி கோவிலில், மாசியில் வரும் சதயம் நட்சத்திர நாளில், ஜெயந்தி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, கந்தசுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. இரவு, கந்தசுவாமி சிறப்பு அலங்காரத்தில், தங்கமயில் வாகனத்தில், மேள தாளத்துடன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.