உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

மேலப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை: மேலப்பாளையத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி, மயான கொள்ளையொட்டி தேரோட்டம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை மேலப்பாளையத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி, மயான கொள்ளையொட்டி தேரோட்டம் நடந்தது. கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் பூஜை நடந்தது. 19ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது. 20ம் தேதி அம்மன் வீதியுலா நடந்தது. 21ம் தேதி முக்காட்டு கப்பரை நிகழ்ச்சி, அம்மன் வீதியுலா நடந்தது. 22ம் தேதி சக்தி அழைத்தல், வீரபத்திரப்படை நிகழ்ச்சி, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் குடல் பிடுங்கி மாலை நிகழ்ச்சி, அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று சுவாமி தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !