உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்

நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8:00 மணிக்கு கோயில் மேல்சாந்தி விக்னேஷ் போற்றி கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி , அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பள்ளத்தெரு தினமலர் நிறுவனர் அமரர் ராமசுப்பையர் நினைவு கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மார்ச் ஐந்தாம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது, ஆறாம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !