உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா

தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா

சங்கராபுரம், : தேவபாண்டலத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் மாசி மாத திருவிழா நடந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் துவங்கி 5 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, கடந்த 20ம் தேதி மாசி திருவிழா துவங்கியது. அதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிேஷக, ஆராதனையும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவபாண்டலம் பருவத ராஜகுலத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !