சீர்காழி கோதண்டராமர் கோவிலில் ராதா கல்யாணம் கோலாகலம்
மயிலாடுதுறை: சீர்காழி கோதண்டராமர் கோவிலில் ராதா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் கோதண்டராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராதா கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை தென்பாதி விநாயகர் கோவில் இருந்து சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனமாடினர். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மாங்கல்ய தாரணத்துடன் ராதா கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.