உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் பிறந்தநாள் : பழங்கள் வழங்கி பக்தர்கள் கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் பிறந்தநாள் : பழங்கள் வழங்கி பக்தர்கள் கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : கோயில் யானை ஆண்டாளுக்கு நேற்று (28.02.2023) 45வது பிறந்தநாளையொட்டி திருக்கோயில் இராமனுஜர் சன்னதி அருகில் மாலை 06.30 அளவில் கொண்டாடப்பட்டது.

ஆண்டாள் யானைக்கு இணை ஆணையர் செ.மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ்செல்வி , உதவி மேலாளர் சி.சண்முகவடிவு , திருக்கோயில் பணியாளர்கள் , பக்தர்கள்வழங்கிய பல வகையான பழங்களை குஷியுடன் சாப்பிட்டது , யானை ஆண்டாள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது; 28.02.1979 ஆம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார்.  அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கினார் , காரமடை கோயிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசிர்வாதம் செய்யும் காட்சியில்  வரும் ,  பின்பு ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வேண்டும் என முறைப்படி எழுதி வாங்கி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தானமாக வழங்கினார் , ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 17.10.1986  ஆம் ஆண்டு தன் முதல் கை சேவையை ஆரம்பித்தது , பெருமாளுக்கான தன் முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுக்கும் பாக்கியத்தை பெற்றது  குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !