உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நேற்று துவங்கியது

பழநி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நேற்று துவங்கியது

பழநி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, பழநிகோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.இதன்படி, தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரையிலும், திருவிழா நாட்களில் இரவு 11 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படும். ஒரு பந்தியில் 200 பேர் சாப்பிடலாம். தினமும் 19 பந்தி நடைபெறும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 800 பக்தர்கள் சாப்பிடலாம். இதற்காக தினமும், 76 ஆயிரம் ரூபாய் செலவிடப்படும். ஆண்டொன்றுக்கு மூன்றரை கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக, நாலரை கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !