விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக விழா: விபசித்து முனிவருக்கு சிவன் காட்சி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்து வரும் மாசி மக திருவிழாவில் விபசித்து முனிவருக்கு சிவன் காட்சியளித்த ஆறாம் நாள் விழாவில் விருத்தகிரீஸ்வரர் விருத்தாம்பிகை பாலாம்பிகை உடன் வீதி உலா புறப்பாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று விருத்தகிரீஸ்வரர், கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு சிவன் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவில் விருத்தகிரீஸ்வரர் விருத்தாம்பிகை பாலாம்பிகை உடன் வீதி உலா புறப்பாடு நடந்தது. 5ம்தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்ட நிகழ்ச்சியும், 6ம்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 7ம்தேதி தெப்ப உற்சவமும், 8ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.