உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் ஹிந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்

கீழக்கரையில் ஹிந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்

கீழக்கரை: ஹிந்து சமய அறநிலையத்துறையின் மெத்தன போக்கை கண்டித்து ஹிந்து தமிழர் பண்பாட்டு பேரவையின் சார்பில் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் கோபி வர்மா தெரிவித்தார்;

இது குறித்து அவர் கூறியதாவது; ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கீழக்கரை நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயில் சேதமடைந்த நிலையில் உள்ளது. மூலவர் மண்டபத்தின் முன்புள்ள பிரகார மண்டபம் இடிபாடுகளுடன் உள்ளது. இதனால் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் வராமல் அருகே உள்ள சந்தின் வழியாக சிரமத்துடன் சென்று வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சித்தி விநாயகர் கோயிலின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஆனால் இதுவரை கோயிலை சீரமைப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் வைத்திருப்பது பக்தர்களை அதிருப்தி உள்ளாக்கி வருகிறது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலை புனரமைப்பு பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்க பக்தர்களை ஒன்று திரட்டி விரைவில் ஹிந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கீழக்கரையில் விரைவில் நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !