காடகனூர் வைஷ்ணவி தீபாஞ்சாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1063 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த காடகனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட வைஷ்ணவி தீபாஞ்சாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அரகண்டநல்லூர் அடுத்த காடகனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வைஷ்ணவி தீபாஞ்சாள் அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது. நாடி சந்தானம், தத்துவர்த்தனை, இரண்டாம் கால விசேஷ திரவியாகுதி, வேத பாராயணம், மாலா மந்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, கடன் புறப்பாடாகி மூலஸ்தான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.