கரிசல்பட்டியில் சந்தனக்கூடு விழா
ADDED :1145 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா மார்ச் 2 தேதி இரவு நடந்தது. கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் இப்பகுதி மக்கள் இணைந்து வீடுகளில் சர்க்கரை பேரிச்சம்பழம் வாங்கி பாத்தியா ஓதி அனைத்து வீடுகளுக்கும் இனிப்பு வழங்கினர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவிற்கு வந்தது. அங்கு சந்தன குடத்திலிருந்து சந்தனம் எடுத்து பாத்தியா ஓதப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.