உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் தேரோட்டம்

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் மாசிப் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்ட விழா நடந்தது. கடந்த பிப். 25 ஆம் தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், ரிஷப, அன்ன, சிம்ம, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4.00 மணிக்கு நகரத்தார்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு சப்தாவரணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மாத்தூர் நகரத்தார்கள் செய்திருந்தனர். இதில், மாத்தூர் உட்பட சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !