உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் வருஷாபிஷேக விழா

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு முனீஸ்வரனுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் மற்றும் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து மகா அர்ச்சனை, மகாதீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை முனீஸ்வரன் குல தெய்வ வழிபாட்டு குழுவினர் மற்றும் சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !