ஸ்ரீரங்கம் கோவிலில் நித்ய அன்னதானத்தை துவக்கினார் முதல்வர் ஜெ.,
ADDED :4778 days ago
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தொடர்ந்து, 14 மணி நேரம் உணவளிக்கும், நித்ய அன்னதானத் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, வெள்ளை கோபுரம் முன் செண்டை மேளமும், ஆயிரங்கால் மண்டபம் முன் நாதஸ்வரம், தவில், கோவில் மேளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரங்கால் மண்டபத்தின் முன் தண்ணீர் தேக்கி, நிஜ தாமரை, அல்லிப் பூக்கள், தாமரை இலைகளை மிதக்க விட்டிருந்தனர். கோவில் தலைமை பட்டாச்சாரியார் ரங்கராஜ பட்டர், முரளி பட்டர், சுழல் முறை அறங்காவலர் பராசர திருவேங்கட பட்டர் உள்ளிட்ட பட்டச்சாரியார்கள், தங்க பூர்ண கும்ப மரியாதையுடன், வேதங்கள் முழங்க ஜெயலலிதாவை வரவேற்றனர். ஆயிரங்கால் மண்டபத்துக்கு வந்த ஜெயலலிதா, நித்ய அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார்.