உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்லி அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்லி அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

திருக்கனுார்: லிங்கா ரெட்டிப்பாளையம் வில்லி அம்மன் கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு தெப்பல் உற்சவம் நடந்தது.மண்ணாடிப்பட்டு தொகுதி லிங்கா ரெட்டிப்பாளையம் புறாக்குளம் அருகே உள்ள 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்லி அம்மன் கோவிலில் மாசி மாத பவுர்ணமி உற்சவம் கடந்த 5ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் நள்ளிரவு வில்லியம்மன் கோவில் புறா குளத்தில் நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், லிங்கா ரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !