அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு இலவச நீர் மோர்
ADDED :915 days ago
அன்னூர்: கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இலவச நீர்மோர் வினியோகம் துவங்கியது. கோடை காலத்தில், பக்தர்களுக்கு உபயதாரர்கள் வாயிலாக, நீர்மோர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொங்கு நாட்டு குரு பரிகார ஸ்தலமான, கோவில் பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று இலவச நீர் மோர் வழங்கும் பணி துவங்கியது. செயல் அலுவலர் அருண்பிரகாஷ் நீர் மோர் வினியோகத்தை துவக்கி வைத்தார். தினமும் 200 பேருக்கு உபயதாரர்கள் வாயிலாக நீர்மோர் வழங்கப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை நீர்மோர் வழங்கப்பட உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.