காஞ்சி ராஜகுளத்தில் தெப்போற்சவம் விமரிசை
ADDED :1028 days ago
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, தெப்போற்சவம் நடைபெறும். நடப்பாண்டு, தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காஞ்சிபுரம்வரதராஜ பெருமாள் வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ராஜகுளம் கிராமம் வந்தார். அங்குள்ள மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பினர்.