காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு காணிக்கை
ADDED :1129 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு அனந்தபுரம் பகுதியை சேர்ந்த சௌடேஸ்வரி குடும்பத்தினர் அன்னதான திட்டத்திற்காக ஒரு லட்சத்து 116 ரூபாய் மற்றும் விநாயகர் "கோ"சம்ரக்ஷனா அறக்கட்டளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 116 ரூபாயை காணிக்கையாக கோயிலுக்கு வழங்கினார்கள்.முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது .விநாயகரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.மேலும் கோயில் சாமி படத்தை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி வழங்கினர்.