நாராயண பெருமாள் கோயில் உறியடி விழா
ADDED :4781 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, உறியடி நடத்தப்பட்டது. காலையில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சேதுநாராயண பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் எழுந்தருளினார். மைய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் வீதி உலா, இரவு உரியடி, வழுக்குமரம் ஏறும் போட்டி நடந்தது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தசபாவினர், கோயில் சேவாசமிதி டிரஸ்ட், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன், சந்தானப்பட்டர் செய்திருந்தார்.