உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா

குபேர சீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் ரோடு தொப்பம்பட்டி சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர சீரடி சாய்பாபா கோவிலில், 4ம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, லட்சுமி குபேர ஹோமம் நடந்தது. தொடர்ந்து, தொப்பம்பட்டி அரசடி ராஜகணபதி கோயிலில் இருந்து பெண்கள், 108 பால்குடம் எடுத்து வந்தனர். சாய்பாபாவுக்கு, 108 கலச அபிஷேகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடும் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !