உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு

இருக்கன்குடி கோயில் உண்டியல்கள் திறப்பு

சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில், ஆடிகடைசி வெள்ளி விழா முடிந்ததை தொடர்ந்து, கொயிலில் உள்ள 10 உண்டியல்கள்  எண்ணப்பட்டன.
இந்துசமய அறநிலையத்துறையின் விருதுநகர் உதவி ஆணையர் கவிதாபிரிய தர்ஷினி,கோயில் செயல்அலுவலர் தனபாலன்,ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், மலையரசபாண்டியன்,கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் ராமமூர்த்திபூஜாரி,பரம்பரை அறங்காவலர்கள் ராஜேந்திரன், சவுந்தர்ராஜன் , ராமர் முன்னிலையில், நேற்று காலை திறந்து, மாலை 5 .45 மணி வரை எண்ணப்பட்டன. பக்தர்கள் காணிக்கையாக, 56 கிராம் தங்கம், 135 கிராம்வெள்ளி, 23 லட்சத்து 14 ஆயிரத்து 240 ரூபாய், கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !