உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரர் கோவில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த மக்கள்

மாதேஸ்வரர் கோவில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த மக்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா ஹட்டி ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு தர்மகர்த்தா இல்லத்தில் தொடங்கியது. சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. 13 ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தருமாறுத்த இல்லத்தில் இருந்து சில்லானை ஊர்வலம் புறப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைகள் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், நீலகிரி மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த மக்கள் தங்கள் கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். கடந்த செண்டை மேளம் கச்சேரி மற்றும் உதகை படகர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. கோவில் தர்மகர்த்தா ராமன் தலைமையிலான கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !