மகாபெரியவா அனுஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்பு
ADDED :943 days ago
உடுமலை: உடுமலை ஸ்ரீ ராமய்யர் கல்யாண மண்டபத்தில், அனுஷ பூஜையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
இது குறித்து உடுமலை பிராமண சேவா சமிதி நிர்வாகிகள் கூறியதாவது: காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா அவதரித்த, நட்சத்திரம் அனுஷம். ஒவ்வொரு மாதமும், அனுஷ நட்சத்திரத்தன்று, அனுஷ பூஜை நடந்து வருகிறது. உடுமலையில், ஸ்ரீ ராமய்யர் திருமண மண்டபத்தில், அனுஷ பூஜை, உடுமலை உபாசனா மற்றும் உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், மாதம்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாலை, 4:30 மணி முதல் 6:30 மணி வரை, அனுஷ பூஜை நடந்தது. முதலில், வித்தேச்வா பூஜை, அனுஷ பூஜை, வேதபாராயணம், ஸ்லோக பாராயணம், நாமசங்கீர்த்தனம், குருவந்தனம், உபன்யாசம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்வாறு, தெரிவித்தனர்.