ஏமப்பேர் சிவன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :944 days ago
கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் சிவன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தது. இதனையொட்டி, காலபைரவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் துாள் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, 108 வடமாலை சாற்றினர். பைரவருக்குரிய 108 மந்திரங்களை வாசித்து, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தனர். பெண்கள் தேங்காய் தீபம், பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் கணேசன் செய்து வைத்தார்.