உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோளுக்கினியானில் திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதி உலா

தோளுக்கினியானில் திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதி உலா

தூத்துக்குடி : திருப்புளியங்குடி,  காய்சினிவேந்தப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாககொண்டாடப்படும். விழாவானது நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று(15ம்தேதி) புதன்கிழமை இரவு  தோளுக்கினியானில் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் காய்சினிவேந்தப் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !