சிவகாசி சிவன் கோயில் கும்பாபிஷேகம் ஆலோசனை கூட்டம்
ADDED :954 days ago
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிவகாசி சிவன் கோயிலில் 2011 ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சிவன் கோயிலில் அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோயில் செயல் அலுவலர் சத்தியசீலன் தலைமை வகித்தார். கோயிலுக்கு பாத்தியப்பட்ட 10 சமுதாய மண்டகப்படியினர் உபயத்தின் மூலமாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் ஏப். 24 ல் பாலாளையம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அசோகன் எம்.எல்.ஏ., துணை மேயர் விக்னேஷ் பிரியா, பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், 10 சமுதாய தலைவர்கள், மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும், சலசலப்பு ஏற்பட்டது.