/
கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன
ADDED :1274 days ago
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் துணை ஆணையர் யக்ஞனநாராயணன், கோயில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழு பெண்கள், கோயில் பணியாளர்கள், அலுவலர்கள் உண்டியல் காணிக்கையை கணக்கிட்டனர். இதில் ரொக்கம் ரூ 37,67, 839 ம், தங்கம் 179.96 கிராம், வெள்ளி 551.84 கிராம். ஐ உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கைகள் வங்கியில் உடனடியாக டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.