உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை விழா

முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மோர்ப்பண்ணையில், தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 3 ல் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மண்டல பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு 18 வகையான அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று, மண்டல பூஜை நடைபெற்றது. பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கிராமத் தலைவர் சிங்காரம், முன்னாள் தலைவர் பாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !