பரமக்குடி துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம்
ADDED :1269 days ago
பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெருவில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று பங்குனி மாத வெள்ளிக்கிழமையையொட்டி காலையில் அம்மனுக்கு பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மன் சந்தன காப்பு அலங்காரம், வெள்ளி கவசத்தில் மூலவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.