ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருவோணம் சிறப்பு பூஜை
ADDED :948 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 7:30 மணியளவில் திருமஞ்சனம், பஜனையுடன் திவ்யபிரபந்தம் செய்யப்பட்டு, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.