உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம்

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம்

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில் பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை பஜனை குழு நடைபெற்றது. அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில்,பஜனை பிரியரான ஹனுமானுக்கு வருடம் முழுவதும் பக்தி பாடல்கள், இன்னிசை, ஆராதனைகள் என நடைபெற்று வருகிறது இதில், திருப்பூர் முத்து பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை பஜனை குழு சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தி பேரவையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !